அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் என்.ஐ.டி உலகளாவிய முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பு.

Published Date: January 5, 2025

CATEGORY: EVENTS & CONFERENCES

இந்திய பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் நாடாக திகழ்வதாக டாடா குழு தலைவர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு 

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் என்.ஐ.டி உலகளாவிய முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி, சென்னையில் நேற்று நடைபெற்றது. சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, திருச்சி என்.ஐ.டி இயக்குனர் அகிலா தலைமை தாங்கினார். மேலும் இந்த கல்வி நிறுவனத்தின் முன்னாள் மாணவர்கள் ஆன டாடா குழுத் தலைவர் சந்திரசேகரன், தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.மேலும், சந்திராயன்-3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் உள்பட பல்வேறு முன்னாள் மாணவர்கள், தொழில்முனைவோர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் சிறப்பு வெள்ளி நாணயம் வெளியிடப்பட்டது. 

 

பொருளாதார வளர்ச்சி 

விழாவில் டாட்டா குழு தலைவர் சந்திரசேகரன் பேசியதாவது: 

இந்திய பொருளாதாரம் மிகவும் வலுவாக உள்ளது. இந்த ஆண்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சி மிதமான நிலையில் இருந்தாலும், மற்ற நாடுகளைக் காட்டிலும் நாம் தொடர்ந்து பொருளாதார வளர்ச்சி அடைவோம். ஜி எஸ் டி வரி வருவாய் அதிகரிப்பும் நாட்டின் பொருளாதாரத்திற்கு வளர்ச்சிக்கும் முக்கியமான காரணமாக உள்ளது. 

2025-ம் ஆண்டு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துக்கு ஒரு தனித்துவமான ஆண்டாக திகழும். தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உலகளவில் வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது. எதிர்காலத்தில் துறை சார்ந்த சிறிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் (எஸ்.எல்.எம்) மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தும். 

எல்.எல்.எம் என்னும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை காட்டிலும் எஸ்.எல்.எம் எனும் துறையை சார்ந்த சிறிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை குறைந்த தொகைகளில் உருவாக்க முடியும்.

டிஜிட்டல் மயம்

இதனால் இந்த ஆண்டு செயற்கை நுண்ணறிவுக்கு ஒரு அற்புதமான ஆண்டாக இருக்கும் என்று நான் உணர்கிறேன். உலகில் எந்த நாடுகளிலும் இல்லாத வகையில் இந்தியாவில் டிஜிட்டல் வுட் கட்டமைப்புகள் வலுவாக உள்ளது. ஆதார், சுகாதாரம், குறைகள் கேட்பு, தீர்வு ,சில்லறை வணிகம் ,வங்கி செயல்பாடுகள் ஆகிய அனைத்து டிஜிட்டல் மயமாகி உள்ளது. அதைப்போல புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டில் இந்தியா மிகச் சிறப்பாக பங்களிப்பை வழங்கி வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

ஜி. எஸ். டி வரி குழப்பம் 

நிகழ்ச்சியில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசுகையில் 1987 ஆம் ஆண்டு திருச்சி என்.ஐ.டி யில் படித்த நினைவுகள் தற்போது ஞாபகம் வருகிறது. கல்லூரியின் கலாச்சாரம் மற்றும் கற்பித்தல் பழக்கவழக்கங்கள் மூலமாக அங்கு படித்த அனைவரும் தற்போது தலை சிறந்த நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றன. ஒவ்வொரு காலாண்டிலும் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நடக்கும் போதெல்லாம், ஜி.எஸ்.டி வருவாய் உயர்ந்திருப்பதாகவும், ஜி.டி.பி. உயர்ந்திருப்பதாகவும் சொல்வார்கள். அதற்கு என்ன? ஜி.எஸ்.டி வரி உயர்ந்தால் ஜி.டி.பி உயரும். ஆனால் ஜி.எஸ்.டி வரி விதிப்பில் உள்ள குழப்பங்களால் நாடும் தொழில் நிறுவனங்களும் பாதிப்படைகின்றன என்றார். 

மாணவிகள் பாதுகாப்பு 

தொடர்ந்து, என்.ஐ.டி இயக்குனர் அகிலா நிருபர்களிடம் கூறியதாவது:

என்னை என்.ஐ.டி  வளாகத்தில் ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க மையம் ரூ.150 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. கல்லூரி நிறுவனம் அரசின் நிதி மற்றும் முன்னாள் மாணவர்கள் பங்களிப்புடன் இந்த மையம் உருவாக்கப்பட உள்ளது. என் ஐ டி இல் ஊக்கத்தொகை தேவைப்படுபவர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு முன்னாள் மாணவர்கள் ஆதரவு வழங்கும் திட்டத்தை தொடங்கி உள்ளோம். இதன் மூலம் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு உறுதியாகும். உயர்கல்விகளில் பயிலும் மாணவிகளுக்கு பாதுகாப்பு அவசியம். இதற்காக, அவர்களுக்கு தைரியம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் பெரிய மாற்றம் உருவாகும். பாதுகாப்பிற்காக புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Media: DAILYTHANTHI